இது தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்..
திருவண்ணாமலை.
இன்று ப்ளூட்டோ என்ற ஓன்பதாவது கோள் நமது பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதற்கு முக்கியமான காரணம் இந்த இடம். வரலாற்று சிறப்புமிக்க இடம்.
நிறைய எரிக்கல் , துணை கோள்கள் , நம்மை போல் உயிரினங்கள் வாழ்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படும் சூரிய குடும்பங்கள் , இன்னும் இங்கு நம்மவர்கள் ஆற்றி உள்ள சாதனைகள் கணக்கில் அடங்காது , அப்படிப்பட்ட சிறப்புமிக்க இடத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ..?
இது வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் ஜவ்வாது மலைகளில் #காவலூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.
இதனை நமது முன்னாள் பிரதமர்.திரு. இராஜீவ் காந்தி யால் திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் கூட Northern Hemisphereஐ மட்டும் தான் ஆராய்ச்சி செய்ய முடியுமாம். ஆனால் இந்த பகுதிகளில் இருந்து Northern and Southern Hemispheres களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதுதான் இந்த இடத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
Southern Hemisphere ல துல்லியமாக ஆராய்ச்சி செய்ய அமெரிக்கர்கள் கூட இங்கு தான் வர வேண்டும்.
மற்றுமொரு முக்கியமான அம்சம் இங்கு இருந்து மட்டுமே 300 நாட்களுக்கு மேலாக திறந்த வான் வெளி (Clear Sky ) கிடைக்கின்றன.
இந்த தொலை நோக்கி யின் கண்ணாடி( Lens ) 9.3 ( 90 இன்ச் ) மீட்டர் Diameter , உங்களால் நம்ப முடிகிறதா.??? இன்னும் ஆச்சரியமான விஷயம் இது முழுக்க முழுக்க இந்தியர்களால் குறிப்பாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது.
இங்கு 6 இன்ச், 10 இன்ச் , 13 இன்ச் , 18 இன்ச் , 24 இன்ச் , 30 இன்ச் , 40 இன்ச் , 48 இன்ச் மற்றும் 90 இன்ச் Telescope பயன்பாட்டில் உள்ளது. இந்த 48 இன்ச் Telescope ஜெர்மன்-ரஷ்யா-இந்தியா கூட்டு தொழில் நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெற்ற கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாடு உலக அரங்கில் தடம் பதித்தது வார்த்தைகளாலும் மற்றும் எழுத்துக்களாலும் கூற இயலாது.
இங்கு ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இங்கு அனுமதிக்கபடுவார்கள். அவர்களுக்கு உங்கள் கண்களுக்கு பூமியை தவிர்த்து அனைத்து கிரகங்கள், புகழ்பெற்ற நட்சத்திரங்கள், கோள்கள், துனை கோள்கள் காண்பிக்கப்படும். உங்கள் ப்ரியமான பிள்ளைகள் பள்ளி புத்தகங்களில் மட்டும் படிக்கும் அவையை அவர்கள் புற கண்களுக்கு காண்பிக்க ஒரு அரிய வாய்ப்பு.
இங்கு அருகில் பீமா நீர்வீழ்ச்சி, குழந்தைகளுக்கான பூங்கா , படகு சவாரி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த வீடு, ஆங்கிலேயர்கள் கட்டிய கண்ணாடி மாளிகை, இயற்கை மருத்துவ பூங்கா, இயற்கை மலைத்தேன், பலாப்பழம், கொய்யா, ராம் சீதா பழம் அதிகமாக கிடைக்கும்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் , உங்கள் கண்களுக்கு மிருகங்கள் கண்களில் புலப்படலாம்.
கூடுதல் தகவலாக #தமிழ்நாடு_சுற்றுலாத்துறையின் எட்டு அறைகள் கொண்ட தங்கும் விடுதி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமனாமரத்தூர் அவர்கள் கட்டுபாட்டில் உள்ளது அவரை தொடர்பு கொண்டு அங்கு தங்கலாம்.
இங்கு மற்ற தங்கும் விடுதிகள் இல்லை , வனத்துறை மற்றும் டிராவல்ஸ் பங்களா உள்ளது.
உணவிற்கு ஜமூனாமத்தூர் மற்றும் ஆலங்காயத்திற்கு தான் செல்ல வேண்டும். இது மிகவும் அடர்த்தியான காட்டு பகுதி ஆதலால் டார்ச் லைட் போன்ற உபகரணங்கள் மிகவும் முக்கியமானது.#புளூட்டோ, என்பது கதிரவ அமைப்பில் இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் கதிரவனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது. நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது.[lower-alpha 6] புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன. கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது[2] கோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை: கதிரவ அமைப்பில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்: அப்பொருள் கதிரவனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவர வேண்டும். நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும். தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’. புளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது. எனவே தான் புளூட்டோ கோள் என்ற தகுதியை இழந்தது
இந்த இடத்திற்கு செல்ல
- பெங்களூர்- திருப்பத்தூர்-ஆலங்காயம்-காவலூர்.
- சென்னை-வேலூர்-வாணியம்பாடி – ஆலங்காயம்-காவலூர் ,
- சேலம்- அரூர் – ஊத்தங்கரை – திருப்பத்தூர் – ஆலங்காயம்-காவலூர்
- பாண்டிச்சேரி – திருவண்ணாமலை – போளூர் – ஜமூனாமத்தூர் – காவலூர்.
- கிருஷ்ணகிரி – திருப்பத்தூர் – காவலூர்
தகவல்: Indian Institute of Astrophysics.