கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் ஞானசேகர் கைது செய்யப்பட்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது ஞானசேகர் கைது செய்யப்பட்டார். தனி பட்டா வழங்கக் கோரி விண்ணப்பித்த அஜித் என்பவரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்றுள்ளார் நில அளவையர் ஞானசேகர்.