சென்னை: கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு கிடையாது என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்தும் திட்டம் இல்லை என்று உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார். கலந்தாய்வு நடத்தினால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிடும் என்று செயலாளர் கூறியுள்ளார். பொறியியல் கல்லூரிகளுடன் கலை, அறிவியல் கல்லூரிகளை ஒப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.