ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வேகத்தடையை கடக்கும்போது லாரி திடீரென நின்றதால், பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. லாரி திடீரென நின்றவுடன் 8 கார்கள், 2 அரசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துகுள்ளானது. காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.