சென்னை: நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மரபுகளை மீறி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ஆளுநர் இதில் தாமதிக்க வேண்டிய அவசியம் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் என்ன முடிவு எடுத்து இருக்கிறார் என்றும் அவர் வினவியுள்ளார். மசோதா நிறைவேறி நடைமுறைக்கு வந்தால் தான் 300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.